நடிகரை அடுத்து இயக்குனரை லவ்வும் நம்பர் நடிகை

|

சென்னை: 4 முறை காதலில் தோல்வி அடைந்த நடிகை கோலிவுட் இயக்குனர் ஒருவரை காதலிக்கிறாராம்.

கேரளாவில் இருந்து கோலிவுட் வந்த அந்த நடிகை எடுத்த எடுப்பில் பெரிய ஹீரோக்களுடன் நடித்தார். இந்நிலையில் தான் அவருக்கும் இளம் ஹீரோ ஒருவருக்கும் காதலாகி அது வம்பாகி முடிந்தது. நடிகையின் இரண்டாம் காதல் டான்ஸாட, மூன்றாவது காதல் பாஸ் ஆக முடியாமல் போக நான்காவது முறையாக ஒரு மார்க்கெட் இல்லா நடிகரை காதலித்தார்.

அந்த நடிகரோ வேறு ஒருவரை திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் நடிகைக்கு மறுபடியும் காதல் ஏற்பட்டுள்ளதாம். இம்முறை அவர் காதலிப்பது ஒரு இயக்குனரை. வைகைப் புயலின் பிரபலமான வசனத்தை தலைப்பாக வைத்து படம் எடுத்து வரும் அந்த இயக்குனரை தான் நடிகை தீவிரமாக காதலிக்கிறாராம்.

நடிகை அந்த இயக்குனரை கேரளாவுக்கு அழைத்துச் சென்று தனது பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் இயக்குனரை திருமணம் செய்ய பெற்றோரிடம் சம்மதமும் வாங்கிவிட்டாராம்.

நடிகையின் காதல் விவகாரம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

 

Post a Comment