விஜய் நடித்து வரும் 58வது படமான புலியின் முதல் தோற்ற டீசர் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் படத்தை வரும் கோடை விடுமுறை முடிவதற்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
சிம்பு தேவன் இயக்கி வரும் இந்த பேன்டசி - சரித்திரப் படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.
படப்பிடிப்பு வேக வேகமாக நடந்து வருகிறது.
படத்தின் முதல் தோற்ற டீசரை விரைவில் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஏப்ரல் முதல்வாரம் படப்பிடிப்பு முடிகிறது. அனைத்து வேலைகளையும் முடித்து மே இறுதிக்குள் படத்தை வெளியிடவிருக்கிறார்கள்.
ரசிகர்கள் மிகப் பெரிய கோடை விருந்தாக படம் அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.
படத்தை பிடி செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் தயாரிக்கின்றனர்.
Post a Comment