பூங்கொத்து அனுப்பி வாழ்த்து... கண்கள் சிவக்க... உதடு துடிக்க... கோபத்தில் நடிகர்!

|

சென்னை : மகன் பட விழாவுக்கு வருவதாக உறுதி அளித்து விட்டு, கடைசி நேரத்தில் பூங்கொத்து மட்டும் அனுப்பிய உச்ச நடிகர்கள் மீது கண்கள் சிவக்க கோபத்தில் இருக்கிறாராம் கப்பல் கட்சி தலைவர்.

தன் மகன் நாயகனாக அரிதாரம் பூசும் இப்படத்திற்கு மயிலு மகளை நாயகியாக்கி முதலில் பப்ளிக்குட்டி தேட முயற்சித்தார் நடிகர். ஆனால், அது பலிக்கவில்லை. எனவே, ஆடியோ விழாவையாவது பிரம்மாண்டமாக நடத்தி அனைவரின் கவனத்தையும் கவர முயற்சித்தார்.

இதற்காக முன்கூட்டியே, தமிழின் உச்ச நடிகர்கள் இருவரிடம் ‘நேரில் வந்து வாழ்த்த வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார். அவர்களும் ‘அப்படியே' என உறுதி அளித்தனர். இந்தச் செய்தி ஊடகங்களிலும் பரபரப்பாக வெளியானது.

ஆனால், சொன்னபடி படவிழாவில் கலந்து கொள்ளாமல், ‘வாக்கு' தவறி விட்டார்கள் உச்ச நடிகர்கள் இருவரும். நேரில் விழாவில் கலந்து கொள்ளாமல், பூங்கொத்து மட்டும் அனுப்பி தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதனால் ஏமாற்றமடைந்த தலைவர், உச்ச நடிகர்கள் இருவர் மீதும் கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

தலைவர் கோபத்திற்காக விழாவில் பங்கேற்று தலைவியின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ள விரும்பாததால் தான் உச்ச நடிகர்கள் விழாவைப் புறக்கணித்து விட்டதாக கூறுகிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்.

 

Post a Comment