சென்னை: தமிழ் சினிமாவில் முதல்முறையாக ஒரு வித்தியாசமான கூட்டணியில் வர இருக்கின்ற திரைப்படம்தான் கார்த்திக் சுப்புராஜின் "இறைவி".
ஜிகர்தண்டா படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அந்தப் படம் அவருக்கு நல்ல வரவேற்பினைப் பெற்றுத் தந்தது. இந்நிலையில் அவரது அடுத்த படம் என்ன வாக இருக்கும் என எதிர்பார்ப்புகள் சினிமா வட்டாரத்தில் சுற்றி வந்தது. அது குறித்த தகவல்கள் இன்று வெளி வந்துள்ளன. அவரது புதிய படத்தின் பெயர் இறைவி.
தமிழ் சினிமாவின் "தாடி" வைத்துக் கொண்டு கோடி, கோடியாய் நடிப்பில் குவிக்கும் இரண்டு முக்கியமான நடிகர்கள் விஜய் சேதுபதியும், பாபி சிம்ஹாவும்.
அதற்கு அடுத்தபடியாக தன்னுடைய கதைகளுக்காவே ரசிக்கப்பட்டு பின்னர் இயக்குனரில் இருந்து நடிகராய் மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தற்போதுதான் அவரது நடிப்பில் "இசை" என்ற படம் வெளியானது.
இவர்கள் மூவரின் வித்தியாசமான கூட்டணியில்தான் "இறைவி" படம் வெளிவர உள்ளது என்ற தகவலால் அப்படம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார்.
Post a Comment