சென்னை: கோலிவுட்டில் தனுஷின் தம்பியும் ஹீரோ தான் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
தனுஷுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். அவரும் இயக்குனராக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கோலிவுட்டின் இளம் ஹீரோக்களில் தனுஷின் தம்பியும் ஒருவர் என்பது உங்களுக்கு தெரியுமா?
யாரப்பா அது என்று கேட்கிறீர்களா? அது நம்ம எஸ்டிஆர் என்ற சிம்புவே தான். என்ன தனுஷின் தம்பி சிம்புவா என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. இதை நாங்கள் சொல்லவில்லை தனுஷே தெரிவித்துள்ளார். என் அண்ணன் செல்வராகவன் படத்தில் என் தம்பி சிம்பு நடிக்கிறார். வாழ்த்துக்கள் சகோதரர்களே என்று தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் சிம்புவை தம்பி என்று அழைத்துள்ளது பெரிய விஷயமா என்றால் ஆமாம் என்பதே பதில். ஒரு காலத்தில் எலியும், புலியுமாக இருந்தவர்கள் அவர்கள். பின்னர் பொது நிகழ்ச்சிகளில் பார்த்தால் பிறருக்காக சிரிக்க மட்டும் செய்தார்கள்.
அதன் பிறகு கட்டிப்பிடித்து நட்பு பாராட்டினார்கள். ஒரே துறையில் இருக்கும் 2 ஹீரோக்கள் எதிரிகளாக இருந்து சகோதரர்களாக மாறியுள்ளது நல்ல விஷயம். கீப் இட் அப் தனுஷ்.
Post a Comment