இருக்கு... ஆனா வேற மாதிரி இருக்கு... கண்ணடித்து காமத்தனமாக சிரிக்கும் Hunterrr!

|

மும்பை: இதோ இன்னும் ஒரு செக்ஸ் பரப்புரைப் படம் வந்து விட்டது. ஆனால் இதில் விழிப்புணர்வு மட்டும் தராமல், இந்தியாவில் நிலவி வரும் போலித்தனமான கலாச்சாரத்தையும் சேர்த்து சாடியுள்ளனராம்.

இந்த இந்திப் படத்தின் பெயர் Hunterrr. ஹர்ஷவர்த்தன் குல்கர்னி இயக்கியுள்ளார். படம் முழுக்க செக்ஸ் குறித்த விஷயம்தான். ஆனால் எல்லாமே லிமிட்டில்தான் இருக்கும் என்று கூறுகிறார் குல்கர்னி.

இருக்கு... ஆனா வேற மாதிரி இருக்கு... கண்ணடித்து காமத்தனமாக சிரிக்கும் Hunterrr!

படத்தின் நாயகனாக வருபவர் குல்ஷன் தேவய்யா. படத்தில் நமக்குத் தெரிந்த முகமாக இருப்பவர் ராதிகா ஆப்தேதான். முதலில் இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் டென்ஷனாகி விட்டாராம் ராதிகா. மேலோட்டமாக பார்த்தீங்கனா அப்படித்தான் இருக்கும் என்று அமைதிப்படுத்தி குல்கர்னி முழுக் கதையையும் சொல்லி அவரை இம்ப்ரஸ் செய்து விட்டாராம். இப்போது குல்கர்னி, ஆப்தேவின் மனம் கவர்ந்த இயக்குநர்களில் ஒருவராகி விட்டார்.

படத்தின் கதை சற்று கில்மாவானதுதான். கண்ணில் படும் பெண்களையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கும் இளைஞனின் கதைதான் இது. அது அழகியாக இருந்தாலும் சரி, ஆண்ட்டியாக இருந்தாலும் சரி, பார்த்துப் பிடித்து விட்டால் உடனே அருகில் போய் விட வேண்டும் என்ற துடிப்புடன் இருப்பவனாம் ஹீரோ.

அது மட்டுமல்லாமல் பெண்களை வீழ்த்துவது எப்படி என்று தன்னுடைய நண்பர்களுக்கும் கூட தாராளமாக டிப்ஸ் கொடுத்து உதவவும் செய்கிறான்.

இருக்கு... ஆனா வேற மாதிரி இருக்கு... கண்ணடித்து காமத்தனமாக சிரிக்கும் Hunterrr!

இந்த ஏடாகூடமான ஹீரோவாக நடித்திருப்பவர் குல்ஷன். பெங்களூரைச் சேர்ந்தவர். மாடல் அழகன். உங்களது ஹீரோ ரொம்ப மோசமானவனா இருக்கானே என்று குல்கர்னியிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. சின்ன வயதில் ஆபாசப் பட போஸ்டரைப் பார்த்து நீங்களும், நானும் நிச்சயம் ஜொள்ளு விட்டிருப்போம். நமக்கு எதிரில் வரும் நம்மை விட வயதான பெண் அழகாக, உடல் கட்டோடு இருந்தால் நிச்சயம் பார்த்து சைட் அடித்திருப்போம். அவர்களின் உடல் அழகைப் பருகாமல் இருக்க மாட்டோம். இது இயல்பு. இதை மறைக்கத் தேவையில்லை.

அதேபோலத்தான் எனது ஹீரோவும். அவனும் சிறு வயதிலிருந்து தனக்குள் வரித்துக் கொண்ட செக்ஸ் ஆசைகளுடன் வளர்கிறான். வளர்ந்ததும் அவன் செய்யும் செயல்களும் செக்ஸ் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் சமூகத்தில் நிறையவே உள்ளனர்.

இதை ஆபாசமாக இல்லாமல் காமெடியும் கலந்து கொடுத்துள்ளேன். படத்தின் கதையைக் கேட்டதும் ராதிகா ஆப்தே இம்ப்ரஸ் ஆகி விட்டார். நான் நடித்ததில் சிறந்த படம் இதுதான் என்றும் அவர் கூறியுள்ளார் என்றார் குல்கர்னி.

படத்தின் டீசரை காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்துள்ளனர், மார்ச் 20ம் தேதி படம் திரைக்கு வருகிறதாம்....!

 

Post a Comment