விஜய், முருகதாஸ் மீதான கத்தி கதை வழக்கு: ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

|

நடிகர் விஜய், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் ஆகியோர் மீதான கத்தி கதைத் திருட்டு வழக்கு வரும் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

விஜய், முருகதாஸ் மீதான கத்தி கதை வழக்கு: ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதையைத் திருடி கத்தி படத்தை எடுத்துவிட்டதாக திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்பு ராஜசேகர் குற்றம்சாட்டினார்.

எனவே இதற்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும், வேறு எந்த மொழியிலும் கத்தி படத்தை மொழியாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் தஞ்சை மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம் ஆகிய 5 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தஞ்சை மாவட்ட செசன்சு நீதிபதி முகமது அலி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம்(ஏப்ரல்) 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.

 

Post a Comment