மே 1-ம் தேதிக்கு தள்ளிப் போனது இடம் பொருள் ஏவல்

|

சீனு ராமசாமி இயக்கத்தில் லிங்குசாமி தயாரிப்பில் உருவாகிவரும் இடம் பொருள் ஏவல் திரைப்படம் வரும் மே 1-ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா நடித்துள்ள இந்தப் படம் மார்ச் மாதமே வெளியாகப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் ஏராளமான படங்கள் இந்த மாதம் தொடர்ந்து வெளியானதால், ரிலீசை தள்ளிப் போட்டனர்.

இதற்கிடையில் லிங்குசாமி தயாரித்துள்ள கமலின் உத்தம வில்லன், மற்றும் சிவகாரத்திகேயன் நடித்த ரஜினி முருகன் ஆகிய படங்களும் ஏப்ரலில் ரிலீசாக உள்ளன.

மே 1-ம் தேதிக்கு தள்ளிப் போனது இடம் பொருள் ஏவல்

எனவே இடம் பொருள் ஏவல் படத்தை மே 1-ம் தேதி வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

இந்தப் படத்தில் முதல் முறையாக யுவன் சங்கர் ராஜாவும் கவிஞர் வைரமுத்துவும் இணைந்துள்ளனர். பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

 

Post a Comment