வீடுகளுக்கு நேரடி சினிமா - சி2எச் - எனும் புதிய முறையில் டிவிடியாக வெளியாகியுள்ள இயக்குநர் சேரனின் புதிய படமான ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்துக்கு தமிழகம் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் வைத்து இந்தப் படத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு டிவிடி வடிவில் படத்தை வெளியிட்டார்.
படத்தை வெளியிட விரும்பும் திரையரங்குகளிலும் நிச்சயம் வெளியிடுவேன் என்று சேரன் கூறினார். ஆனால் தியேட்டர்கள் முன்வரவில்லை.
இதனால் இப்போதைக்கு டிவிடியாக மட்டும், 50 லட்சம் சின்னத் திரைகளில் படத்தை வெளியிடுகிறார் சேரன்.
ஒரு டிவிடியின் விலை, அதுவும் 5.1 ஒலித் தரத்தில் ஒரிஜினல் டிவிடி, ரூ 50 மட்டும்தான்.
இதனால் அது ஒரு பெரிய தொகை இல்லை என்று நினைத்து இந்த டிவிடியை மக்கள் வாங்கியுள்ளனர்.
டிவிடியை வாங்கிய பலரும் ஆர்வத்துடன் அதுகுறித்து சமூக இணையதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் மவுனம் காத்து வந்த திரையுலக பிரமுகர்கள் பலரும் இந்தப் படத்தை வாங்கியுள்ளதோடு, சேரனுக்கு வாழ்த்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ளது, சி2எச் திட்டத்தை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது.
Post a Comment