அட, நெசமாவே 3 மாசம் புதுப்படம் ரிலீஸ் ஆகாதா?

|

சில தினங்களுக்கு முன் நடந்த தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில், இப்போதுள்ள திரைத்துறையின் ஒழுங்கற்ற பட வெளியீடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க 6 மாதங்களுக்கு தொழிலை நிறுத்திவிடலாம். படங்களையும் வெளியிட வேண்டாம் என்ற ஒரு யோசனையைச் சிலர் முன் வைத்தனர்.

இதற்கு எதிரான கருத்துகள் மிகக் குறைந்த அளவுக்குதான் வந்தன. 6 மாதங்கள் வேண்டாம்... 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கலாம் என்று அதில் சிலர் திருத்தம் சொல்ல, அதை அனைவருமே கிட்டத்தட்ட ஏற்றுக் கொண்டனர்.

அட, நெசமாவே 3 மாசம் புதுப்படம் ரிலீஸ் ஆகாதா?

இதைப் பார்த்த சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, உறுப்பினர்களின் பெரும் ஆதரவுடன் வந்திருக்கும் யோசனையை கவுன்சில் புறக்கணிக்காது. அனைவருடனும் கலந்து பேசிவிட்டு இரண்டு வாரங்களில் ஒரு முடிவை அறிவிப்போம் என்றார்.

இப்போது உண்மையிலேயே இப்படி ஒரு வேலை நிறுத்தம் வந்தால் கூட நல்லதுதான், அப்படி வந்தால் என்னென்ன மாற்றங்கள் வரக் கூடும் என்பது பற்றியும் பலரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், இந்த மூன்று மாத காலம் படத்தை வெளியிடாமல் முடக்கினால், வாங்கிய கடன்களுக்கு வட்டி என்னாவது? தினசரி இந்த தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் தொழிலாளர்கள் நிலை? பற்றியும் விவாதித்து வருகிறார்கள்.

இரண்டாவது தரப்பினரின் கேள்விகளுக்கு பதில்களை தயாரிப்பாளர்கள் சிலர் தயாராகவே வைத்துள்ளனர்.

ஒன்று தொழிலாளர்களை அந்த மூன்று மாத காலத்துக்கு முன்கூட்டியே தயார்ப்படுத்துவது போல சில ஏற்பாடுகளைச் செய்வது. அடுத்து கடன் கொடுத்தவர்களிடம் மூன்று மாதங்கள் வட்டி விடுப்பு கோருவது. சினிமா பைனான்ஸியர்களும் சினிமாவில் ஒரு அங்கம்தானே. எனவே துறையின் நலன் கருதி, அவர்கள் மூன்று மாத காலத்துக்கு வட்டி கேட்காமல் இருக்க வேண்டும் என்ற யோசனையையும் சிலர் முன் வைத்துள்ளனர்.

அப்ப நிசமாவே 3 மாதங்களுக்கு புதுப்படங்கள் வராதா?

 

Post a Comment