சென்னை: உலகத்தின் சரி பாதி பெண்கள் தான், மீதமுள்ள பாதியும் அவர்கள் உருவாக்கியது தான் என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தையொட்டி, மார்ச் 8ம் தேதி ரெயின் டிராப்ஸ் சாதனைப் பெண்கள் 2015 விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த பெண்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப் பட்டது.
நடிகை ராதிகா சரத்குமார், பாடகி வாணி ஜெயராம், ஏ.ஆர்.ரெஹானா, பவதாரிணி, சின்னப்பொண்ணு உள்ளிட்டோருக்கு இந்த விழாவில் விருது வழங்கப் பட்டது.
சாதனைப் பெண்கள் விருது பெற்றது தொடர்பாக ராதிகா சரத்குமார் பேசுகையில், ‘பெண்கள் தன்னம்பிக்கையை மட்டும் ஒருபோதும் விட்டு விடக் கூடாது. இந்த ௨லகத்தின் சரி பாதியே நாம் தான். மீதமுள்ள பாதி நாம் உருவாக்கியது தான், எனவே துணிச்சலாக இருங்கள், நம்மால் எதுவும் முடியும் நம்புங்கள் வெற்றி நம் கையில்' என்றார்.
Post a Comment