விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் நடித்த சகாப்தம் படம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி 500-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது என அதன் தயாரிப்பாளர் எல்கே சுதீப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், "எங்கள் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அறிமுகநாயகன் சண்முகபாண்டியன் நடிக்கும் சகாப்தம் திரைப்படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளிவருகிறது.
இப்படம் தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் ஆந்திரா,கர்நாடகா,கேரளா, மும்பை, டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகள் என மொத்தம் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளிவரவுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளனர்.
சகாப்தம் படத்தை சுரேந்திரன் இயக்கியுள்ளார். நேஹா, சுப்ரா என இரு புதுமுகங்கள் நாயகிகளாக நடித்துள்ளனர். விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்.
கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.
Post a Comment