மும்பை: மும்பையில் நடந்த மிர்ச்சி மியூசிக் விருது விழாவில் நடிகைகள் ராக்கி சாவந்த் மற்றும் பூனம் பாண்டேவுக்கு இடையே கவர்ச்சி போட்டி நடந்துள்ளது.
பாலிவுட்டில் நுழைந்து நடிப்பில் ஜொலிக்க முடியாமல் அரசியல் பக்கம் சென்று அங்கும் குட்டுபட்டவர் ராக்கி சாவந்த். அவர் உளறுவதால் பாலிவுட்காரர்கள் அவரை மோட்டார் வாய் என்று கூறுகிறார்கள். நானும் நடிகை தான், மாடல் தான் என்று கூறிக் கொண்டு அவ்வப்போது நிர்வாண, அரை நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருபவர் பூனம் பாண்டே.
இந்த இருவரும் கடந்த 26ம் தேதி மும்பையில் உள்ள யஷ்ராஜ் ஸ்டுடியோஸில் நடந்த மிர்ச்சி மியூஸிக் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். விழாவுக்கு ராக்கி சாவந்த் கருப்பு நிற ஸ்டாரப்லெஸ் உடையிலும், பூனம் சிவப்பு நிற கவுனிலும் வந்திருந்தனர்.
அம்மணிகள் இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு செய்தியாளர்கள் முன்பு குனிந்து குனிந்து கவர்ச்சி காட்டினர். அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த கவர்ச்சி போட்டியை கவனிக்க பிறர் தவறவில்லை.
ராக்கியும், பூனமும் பிறர் கவனத்தை கவர இதுபோன்று கவர்ச்சி காட்டுவது புதிது அல்ல.
Post a Comment