வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா திடீரென மாற்றப்பட்டதாகவும், அவருக்கு பதில் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட்பிரபுவின் முதல் படத்திலிருந்து அவர் படங்களுக்கு இசையமைப்பவர் யுவன் சங்கர் ராஜாதான். அத்தனைப் படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்துள்ளன.
அதேபோல, சூர்யாவுக்கும் ராசியான இசையமைப்பாளர் யுவன்தான். சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் தொடங்கி பல படங்களுக்கு யுவன் இசை தந்துள்ளார்.
வெங்கட் பிரபு - சூர்யா கூட்டணியில் மாஸ் படம் ஆரம்பித்த போது, இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் சூர்யாவுக்கும் யுவனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். மே 1-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பாடல்களை இன்னும் முடித்ததுத் தராமல் யுவன் தாமதம் செய்ததால் அவருக்குப் பதில் தமனை ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் வெங்கட்பிரபுவைக் கேட்காமலேயே இந்த முடிவை சூர்யாவும் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீனும் மேற்கொண்டதாகவும், இதனால் வெங்கட்பிரபு கோபத்துடன் இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இன்னொரு பக்கம், ஒரு பாடலுக்கு மட்டும் தமன் இசையமைப்பதாகவும், மற்றபடி யுவன் சங்கர்தான் இசையமைப்பாளர் என்றும் கூறுகிறார்கள். படத்தின் ஒரு பாடலுக்கு தமன் இசையமைத்ததால் இப்படி ஒரு செய்தி பரவியதாகவும் கூறப்படுகிறது.
உண்மை என்ன என்பதை யுவனோ ஸ்டுடியோ கிரீனோதான் விளக்க வேண்டும்!
Post a Comment