சென்னை: அதிர்ஷ்டம் அந்தப் பக்கம் வந்தா சிலருக்கு துரதிர்ஷ்டம் இந்தப் பக்கமாக வரும். சிலருக்கு மட்டும்தான் நாலாபக்கமும் கான்க்ரீட்டையும் உடைத்துக் கொண்டு லட்சுமி முற்றுகையிடும் நிலை ஏற்படும். அப்படி ஒரு யோகக்காரராக மாறியிருக்கிறார் இந்த நடிகர்.
இசை வழியாக சினிமாவில் நுழைந்து இன்று நடிகராக உயர்ந்திருப்பவர் இந்த பாட்ஷாவின் எதிரி நடிகர்.
விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களே நடித்திருந்தாலும், வித்தியாசமான படங்களாக நடிப்பதால் நடிகருக்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக்கொண்டே தான் போகிறது. தற்போது கைவசம் மூன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வைத்துள்ளார் நடிகர்.
இந்நிலையில், தனது வருமானத்தைக் கொண்டு தற்போது பிரபல ஸ்டூடியோவில் ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டுள்ளாராம் நடிகர். மண்ணுல போட்டக் காசு பொன்னாகும் என நடிகர் எண்ணுகிறாராம்.
ரொம்பப் பிரமாதம்ய்யா.. ரொம்பப் பிரமாதம்!
Post a Comment