'போடா.. ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்...' படையப்பா படத்தில் ரஜினி பேசும் புகழ்பெற்ற பஞ்ச் வசனம் இது.
இது பல ஆயிரம் ரசிகர்களின் மொபைல்களில் ரிங் டோனும் கூட.
என்னடா இத்தனை நாட்களாக இதை எந்தப் படத்துக்கும் தலைப்பாக வைக்கவில்லையே என்று பார்த்தால்... இதோ வச்சிட்டாங்க!
ஜெயம்கொண்டான் படத்தை இயக்கிய கண்ணன் இயக்கும் அடுத்த படத்துக்கு தலைப்பு, 'போடா.. ஆண்டவனே என் பக்கம்' என்பதுதான்.
இந்தப் படத்தின் நாயகனாக விஷ்ணு நடிக்கிறார். ஜோடியாக பிரயாகா நடிக்கிறார். இவர் பிசாசு படத்தில் நடித்தவர்.
காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தை விஜய் ராஜ் ஜோதி தயாரிக்கிறார். இப்படத்தில் முதலில் அட்டகத்தி தினேஷ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது விஷ்ணு நடிக்கிறார். பிசாசு நாயகி ப்ரயாகா நடிக்கும் அடுத்த படம் இது.
படபிடிப்பு மே மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. சென்னையில் தொடர்ந்து 45 நாட்கள் படபிடிப்பு நடைபெறும். பாடல் காட்சிகள் கனடாவில் 10 நாட்கள் படமாக்க உள்ளது.
இந்தப் படத்துக்காக சென்னை ரிட்சி தெரு போன்று பிரம்மாண்டமான செட் வடிவமைக்க படுகிறது. முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் முன்னணி இசை அமைப்பாளர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.
படத்தை செப்டம்பரில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
Post a Comment