தமிழில் ரீமேக்காகிறது பெங்களூர் டேஸ்... ஆர்யா- ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கின்றனர்!

|

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற பெங்களூர் டேஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்யா, ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கின்றனர்.

தமிழில் ராஜபாட்டை, நான் ஈ, இரண்டாம் உலகம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களைத் தந்த பிவிபி சினிமாஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

தமிழில் ரீமேக்காகிறது பெங்களூர் டேஸ்... ஆர்யா- ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கின்றனர்!

ஏற்கெனவே நாகார்ஜுனா, கார்த்தி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரம்மாண்டமான படத்தைத் தயாரித்து வருகிறது இந்த நிறுவனம்.

இப்படம் தவிர அனுஷ்கா நடிப்பில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தையும் தயாரித்து வருகிறது. இதை அடுத்து தனது 11 ஆவது தயாரிப்பாக ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளது.

தமிழில் ரீமேக்காகிறது பெங்களூர் டேஸ்... ஆர்யா- ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கின்றனர்!

இப்படத்தில் ஆர்யா, ஸ்ரீதிவ்யாவுடன் பாபி சிம்ஹா, ராணா டக்குபதி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் 'பொம்மரிலு' பாஸ்கர்.

குகன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார். பரம் வி பொட்லூரி தயாரிக்கிறார். படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் நடந்தது.

 

Post a Comment