"ரஸ்க்" சாப்பிட ஆசைப்பட்டு "ரிஸ்க்" எடுக்க விரும்பாத நடிகர்...!

|

மும்பை: இந்திப்படப் பிடிப்பின் போது வாரிசு நடிகைக்கு முன்னணி நடிகர் ஒருவர் லிப் டூ லிப் தர மறுத்தது தான் பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

கரும்புத் தின்னக் கூலி கேட்கிறாரே... பிழைக்கத் தெரியாத மனுஷன் என ஒருபுறம் ஆதங்கங்களும், மறுபக்கம், திருமணமாகியது முதல் மனைவி சொல்லே மந்திரம் என வாழ்கிறார் என நடிகருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. ஆனால், உண்மை நிலை இது இல்லை என்கின்றனர் விசயம் தெரிந்தவர்கள்.

திருமணத்திற்குப் பிறகு ஹீரோயினுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என ஹீரோ சொல்லி இருந்தது உண்மை தானாம். ஆனால், கதைக்கு இந்த முத்தக்காட்சி கட்டாயம் தேவை என இயக்குநர் சொன்னதால் நடிகர் சம்மதம் தெரிவித்திருந்தாராம்.

இந்நிலையில், சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் ‘பிக் 'பீவரால் பாதிக்கப்பட்டார். இதனால் பாலிவுட்டில் பலரும் சற்று பீதியில்தான் இருக்கிறார்களாம். இந்த நிலையில்தான் இந்த முத்தப் பிரச்சினை சம்பந்தப்பட்ட நடிகருக்கு வரவே அவர் யோசித்துள்ளார். வாரிசு நடிகை ஆரோக்கியமாகத் தான் இருக்கிறார் என்றபோதும், "ரஸ்க்" சாப்பிட ஆசைப்பட்டு "ரிஸ்க்" எடுக்க விரும்பவில்லையாம் நடிகர்.

அதனால் தான் முத்தத்திற்கு நோ சொன்னாராம்!

 

Post a Comment