விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘புலி' படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே படமாகிறது.
படத்தின் சண்டைக் காட்சிகள் சமீபத்தில்தான் ஆந்திராவின் வனப் பகுதிகளில் படமாக்கப்பட்டது.
இப்போது அதிரப்பள்ளிக்கு வந்திருக்கிறார்கள். இந்த நீர்வீழ்ச்சியை ‘இந்தியாவின் நயாகரா' என்பார்கள். எப்போதும் பெரும் வேகத்துடன் தண்ணீர் விழும் அருவி இது.
இங்குள்ள அடர்ந்த காட்டுக்குள் ‘புலி' படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளனர். இன்னும் இரண்டு வாரங்கள் இங்கு படப்பிடிப்பை நடத்துகிறார்கள்.
‘புலி' படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி கபூர், சுதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
விரைவில் படத்தின் இசை வெளியாகவிருக்கிறது. விஜய் பிறந்த நாளில் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.
Post a Comment