செல்லத்தின் மறைவால் துக்கம் நெஞ்சை அடைக்கிறது: ஷாருக்கான்

|

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் ஆசையாக வளர்த்த நாய் இறந்துவிட்டதால் கவலையில் உள்ளார்.

அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ஷாருக்கான் தற்போது ஃபேன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஆசையாக வளர்த்த ஜப்பானைச் சேர்ந்த நாய் இறந்துவிட்டது. டாஷ் என்று பெயரிடப்பட்டிருந்த அந்த நாய் ஷாருக்கின் குடும்பத்தில் ஒருவராக இருந்தது. அதன் மீது அனைவரும் அதிக அன்பு வைத்திருந்தனர்.

செல்லத்தின் மறைவால் துக்கம் நெஞ்சை அடைக்கிறது: ஷாருக்கான்

டாஷின் பிரிவால் ஷாருக்கானின் குடும்பத்தார் கவலையில் உள்ளனர். டாஷ் இறந்துவிட்டதை நினைத்தால் தனக்கு நெஞ்சடைப்பதாக ஷாருக்கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் ஷாருக் மட்டும் அல்ல பல நடிகர், நடிகைகள் தாங்கள் வளர்க்கும் நாய் மீது உயிரையே வைத்துள்ளனர். முன்னதாக சல்மான் கான் தனது உடல்நலம் பாதிக்கப்பட்ட நாயை பார்க்க படப்பிடிப்பையே ரத்து செய்தார்.

அண்மையில் நடிகர் ஷாஹித் கபூர் நாய் ஒன்றை வாங்கியுள்ளார். நடிகைகள் அனுஷ்கா சர்மா, பிபாஷா பாசு, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரும் நாய் வளர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment