விழுந்து விழுந்து கவனித்த படக்குழு: ஓவரா சீன் போட்ட நம்பர் நடிகை

|

சென்னை: பேய் படக்குழுவினர் ஓவராக தாங்கியதால் நம்பர் நடிகை வழக்கத்திற்கு மாறாக ஓவர் சீன் போட்டாராம்.

நம்பர் நடிகை ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டால் அவர் அர்பணிப்புடன் நடந்து கொள்வார். கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளபோதிலும் அவர் படப்பிடிப்பு தளத்தில் சீன் போட மாட்டார், யாரையும் அதிகாரம் செய்து எரிச்சல் அடைய வைக்க மாட்டார்.

நல்லா இருந்த நம்பர் நடிகையை இப்படி மாத்திட்டாங்களே பரமா!

நடிகையின் இந்த குணங்களால் தான் அவரை தயாரிப்பாளர்களுக்கு பிடித்துள்ளது. ஹீரோவுடனான கெமிஸ்ட்ரியை திரையில் அருமையாக கொண்டு வந்துவிடுவார் என்பதால் அவருடன் நடிக்க அனைத்து இளம் ஹீரோக்களும் போட்டி போடுகிறார்கள்.

இந்நிலையில் நடிகை ஒரு பேய் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது படக்குழுவினர் நடிகையை விழுந்து விழுந்து கவனித்துள்ளனர். இதை பார்த்த நடிகை பிற நடிகைகளை போன்று அதிகாரம் செய்ய ஆரம்பித்துவிட்டாராம்.

நல்லா இருந்த பொண்ணை தேவையில்லாமல் தாங்கி இப்படி மாற்றிவிட்டாங்களே என்று தயாரிப்பு வட்டம் புலம்பியதாம்.

 

Post a Comment