சென்னை: வடிவேலுவின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவாவிற்கென்றால், விவேக்கின் தண்ணில கண்டம் வசனத்தினைக் கையில் எடுத்துள்ளார் சின்னத்திரை தொகுப்பாளர் தீபக் தன்னுடைய படத்தின் தலைப்பிற்கு.
தமிழ் சினிமாவில் தற்போது கடினமான வேலை என்றால், ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பது தான். அந்த வகையில் ஏற்கனவே ஹிட் ஆன பாடல்களோ, அல்லது நகைச்சுவை வசனங்களையோ படத்தின் தலைப்பாக வைத்தால் இன்னும் மக்களை கவரும்.
அதேபோல் சமீபத்தில் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சிரிக்க வைத்த டீசர், என்றால் ஒரு ரோடு, ரோட்டுக்கு அந்தாண்ட நா நல்லவன், இந்தாண்ட ரொம்ப கெட்டவன் என்று ராஜேந்திரன் கூறும் "இவனுக்கு தண்ணில கண்டம்" படத்தின் டீசர் தான்.
இப்படத்தில் சின்னத்திரை கலைஞர் தீபக் ஹீரோவாக நடித்துள்ளார். ஏற்கனவே வடிவேலுவில் காமெடியில் மைல் கல்லான வின்னர் படத்தில் இடம்பெறும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் வசனத்தை படத் தலைப்பாக சிவகார்த்திகேயன் பயன்படுத்தி தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாகிவிட்டார்.
தற்போது காமெடி நடிகர் விவேக் ஒரு படத்தில் தண்ணில கண்டம் என்ற வசனத்தைப் பயன்படுத்தியிருப்பார். அதே வசனத்தை இப்படக்குழுவினர் பயன்படுத்த கண்டிப்பாக இந்த படமும் மாபெரும் வரவேற்பு பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த தகவலை இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விவேக் அவர்களே கூறினார்.
Post a Comment