'மே ஹூன் ரஜினிகாந்த்' (நான்தான் ரஜினி காந்த்) என்ற படத்தின் தலைப்பில் தன் பெயரைப் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்தப் படத்தை மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில், ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தை தரம் தாழ்ந்து சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘மே ஹூன் ரஜினிகாந்த்' என்ற படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு கடந்த 11-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சினிமா பைனான்ஸ்சியர் முகுல்சந்த் போத்ரா, தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். அதில், வடமாநிலத்தில் வெளியாகும் திரைப்படத்தினால், தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆனால், அவரது சம்பந்தி கஸ்தூரி ராஜா, ரஜினிகாந்த் பெயரை கடன் வாங்கி அதை திருப்பித்தராமல் உள்ளார். இதுகுறித்து பத்திரிகையில் செய்தி வெளியாகியும், ரஜினிகாந்த் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக கருதாமல் உள்ளார். எனவே, என்னையும் இந்த வழக்கில ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும்' என்ற கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் சார்பில் ஆஜரான வக்கீல், ‘தன் கட்சிகாரர் ரஜினிகாந்தை தொடர்புக் கொள்ள முடிய வில்லை என்றும் அவரது கருத்தை கேட்டு பதில் மனு தாக்கல் செய்வதாக' கூறினார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Post a Comment