பப்ளிசிட்டிக்காக கொளுத்திப் போட்ட கிசுகிசு... நிஜமாகவே டூ விட்டுக் கொண்ட நடிகைகள்!

|

சென்னை: உயரமான யோகா நடிகை நடித்துள்ள மெகா பட்ஜெட் படம் ஒன்று விரைவில் ரிலீசாக உள்ளது. நீண்ட காலமாக தயாரிக்கப் பட்டு வரும் இப்படம் தொடர்பாக ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தில் காதலைக் கண்ட நடிகையைச் சேர்த்தார் இயக்குநர். பால் போன்ற வண்ணத்தில் சிக்கென ஸ்லிம்மாகி இப்படத்தில் நடிகை தோன்றும் ஸ்டில்கள் இணையத்தில் உலா வந்தன.

பப்ளிசிட்டிக்காக கொளுத்திப் போட்ட கிசுகிசு... நிஜமாகவே டூ விட்டுக் கொண்ட நடிகைகள்!

அதோடு, இப்படத்தில் உயர்ந்த நடிகையை விட, புதிதாக வந்த காதல் நடிகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் செய்தி பரவியது. இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உயரமான நடிகையின் காதுக்கும் இந்தத் தகவல் சென்றதால், நடிகை அப்செட் ஆகிவிட்டாராம். புதிய போட்டியாக முளைத்த காதல் நடிகையோடு பேசுவதையும் தடாலடியாக நிறுத்தி விட்டாராம்.

ஆனால், பரவிய வதந்தியில் உண்மையில்லையாம். சும்மா பட விளம்பரத்திற்காக வேண்டப்பட்டவர்களே இந்த வதந்தியைப் பரப்பியதாக கூறுகிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்.

 

Post a Comment