அஜீத்தின் புதுப் படம்.. ஜோடி நயன்தாராவா ஸ்ருதியா?

|

மகன் பிறந்த சந்தோஷத்துடன், அடுத்த பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் அஜீத். இது அவருக்கு 56வது படம். இன்னும் தலைப்பு அறிவிக்கப்படாததால் வழக்கம்போல 'தல 56' என்று குறிப்பிட ஆரம்பித்துவிட்டனர்.

இந்தப் படத்தை இயக்குபவர் சிவா. சிறுத்தை, வீரம் படங்களைத் தந்தவர்.

அஜீத்தின் புதுப் படம்.. ஜோடி நயன்தாராவா ஸ்ருதியா?

அஜீத்தை வைத்து ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களைத் தயாரித்த ஏஎம் ரத்னம்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் (அடுத்த படமும் இவர்தான் என்கிறார்கள்!).

வீரம் படத்தில் அஜீத்துடன் முதல்முறையாக இணைந்த சந்தானத்துக்கு, இந்தப் படத்திலும் பிரதான காமெடியன் வேடம்.

அஜீத்துக்கு ஜோடி யார் என்பதுதான் இப்போது பிரதான கேள்வி. நயன்தாரா மற்றும் ஸ்ருதி ஹாஸனுடன் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

நயன்தாரா ஏற்கெனவே பில்லா, ஆரம்பம் படங்களில் அஜீத்துடன் ஜோடி போட்டுவிட்டார். ஸ்ருதி ஹாஸனுக்கு இதுவே முதல்முறை.

 

Post a Comment