ஊட்டி வீட்டு வரியைச் செலுத்தினர் நயன்தாரா, ஜெயராம்!

|

ஊட்டி நகராட்சியால் ஜப்தி நோட்டீஸ் விடப்பட்ட தங்கள் வீடுகளுக்கு சொத்து வரி கட்டினர் நடிகை நயன்தாராவும் நடிகர் ஜெயராமும்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட லவ்டேல் பகுதியில் உள்ள 142 வீடுகள் கொண்ட பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் சில வீடுகளுக்கு சொத்து வரி பாக்கி வைத்திருந்தனர் அவற்றின் உரிமையாளர்கள்.

ஊட்டி வீட்டு வரியைச் செலுத்தினர் நயன்தாரா, ஜெயராம்!

அவர்களுள் திரைப்பட நடிகர் ஜெயராம், நடிகை நயன்தாராவும் இருந்தனர்.

பலமுறை எச்சரிக்கை விடுத்தும் வரி கட்டாத காரணத்தால் நகராட்சி அதிகாரிகள் அந்த வீடுகளில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டினர்.

இந்த நிலையில் நடிகர் ஜெயராம் தனது வீட்டுக்கு கட்ட வேண்டிய கடந்த ஆண்டு வரி பாக்கி மற்றும் இந்த ஆண்டு வரி பாக்கி ஆகியவற்றை சேர்த்து ரூ.10 ஆயிரத்தை நகராட்சியில் கட்டினார்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சிவக்குமார் கூறுகையில், "லவ்டேல் பகுதியில் உள்ள சில அபார்ட்மென்ட்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி வைத்திருப்பது தெரிய வந்து ஜப்தி நோட்டீஸ் அனுப்பினோம்.

இதையடுத்து நடிகர் ஜெயராம் வீட்டுக்கான நிலுவை வரி புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.

நயன்தாரா வீட்டுக்கு கடந்த நிதியாண்டுக்கும் மற்றும் இந்த நிதி ஆண்டுக்கும் அந்த தொகையை சேர்த்து ரூ.6 ஆயிரம் பாக்கி இருந்தது. அவர் சார்பில் வீட்டை பராமரிக்கும் நபர் கட்டிச்சென்றார்," என்றார்.

 

Post a Comment