மும்பை: "கவர்ச்சிப் பெருங்கடல்" சன்னி லியோனுக்கு ஸ்கின் பிரச்சினை ஏற்பட்டு இப்போது சரியாகி விட்டதாம். எல்லாம் இந்த ஏக் பஹேலி லீலா படப்பிடிப்பின்போது பாலில் குளியல் போட்டதால் வந்த வினையாம்.
ஏக் பஹேலி லீலா என்ற படத்தில் நடித்துள்ளார் சன்னி. படத்தில் சனிக்கு மிக முக்கியப் பாத்திரம்.. கூடவே கவர்ச்சியும். ராஜஸ்தானில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது அவருக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டு அவதிப்பட்டு விட்டாராம்.
இந்த தடிப்புக்கு காரணம் பால்... காட்சிப்படி சன்னி லியோனை உட்கார வைத்து 100 லிட்டர் பாலால் அவரை குளிப்பாட்ட வேண்டுமாம். அப்போது செம குளிராக இருந்ததாம். ஜில் பாலை ஊற்றி, சன்னிக்கு ஜல்ப்பு வந்து விடுமே என்று பயந்துள்ளனர். இதையடுத்து பாலில் சுடுநீரைக் கலந்து அதை நீ்ர்க்க வைத்து பிறகு ஊற்றிக் குளிப்பாட்டியுள்ளனர்.
ஆனால் அது அவருக்கு அலர்ஜியாகி விட்டது. உடம்பெல்லம் தடிப்பு தடிப்பாக வந்து அவதிப்பட்டு விட்டாராம். உடம்பு முழுவதும் சிவப்பு நிறத்தில் தடிப்பு பரவவே, உடனே டாக்டரைக் கூப்பிட்டுள்ளனர். அவர் வந்து பார்த்து இது சாதாரண அலர்ஜிதான் என்று கூறி மருந்து கொடுத்துள்ளார். அதைப் போட்ட பின்னர் சன்னிக்கு தடிப்பு குறைந்து நார்மலானாராம். அதன் பிறகு தொடர்ந்து நடித்தாராம்.
படப்பிடிப்பின்போது சன்னியின் வீட்டுக்காரர் டேணியல் வெப்பரும் உடன் இருந்தாராம். படப்பிடிப்பை ரசித்து வேடிக்கை பார்த்தாராம்.
Post a Comment