தெலுங்கில் ஜெயிக்குமா ஜில்லா?

|

மோகன் லால் - விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான ஜில்லா படம், விரைவில் தெலுங்கில் தயாராகிறது.

இதில் வெங்கடேஷ் மற்றும் ரவி தேஜா நடிக்கின்றனர்.

தெலுங்கில் ஜெயிக்குமா ஜில்லா?

விஜய், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியான படம் ஜில்லா. ஆர்டி நேசன் இயக்கியிருந்தார். இமான் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். மதுரையை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. ஞ

இதன் ரீமேக்கில் வெங்கடேஷ் மற்றும் ரவி தேஜா ஆகியோர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் வீரூ போட்லா இயக்கவுள்ளார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

ஜில்லா படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் பவன் கல்யாணின் நெருங்கிய நண்பர் சரத் மாரார் வைத்துள்ளார்.

முன்னதாக 'ஜில்லா'வின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வேறொரு முன்னணி நடிகருடன்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவருக்கு கதையில் திருப்தி ஏற்படாததால் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது அந்த வாய்ப்பு வெங்கடேஷ் மற்றும் ரவி தேஜாவுக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment