விண்ணைத்தாண்டி வருவாயா', ‘கோ', முப்பொழுதும் உன் கற்பனைகள்', யாமிருக்க பயமே உள்ளிட்ட வித்தியாசமான படங்களைத் தந்த ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் அடுத்து தயாரிக்கும் படத்தில் ஜீவா நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கு கவலை வேண்டாம் என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்நிறுவனம் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ', ‘யான்' ஆகிய படங்களை தயாரித்துள்ளது.
இப்படத்தை ‘யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டிகே இயக்கவிருக்கிறார். இப்படத்தில் பாபி சிம்ஹா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.
ஜீவா நடிப்பில் கடைசியாக வெளிந்த ‘யான்' படத்தையும் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம்தான் தயாரித்திருந்தது. நீண்டகால தயாரிப்பில் இருந்த அப்படம் வெளிவந்து சரிவர வெற்றியடையவில்லை. இயக்குநர் ரவி கே சந்திரன் தங்களை மோசடி செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியது.
ஜீவாவுடன் இணைந்து மீண்டும் ஒரு வெற்றிப் படம் தர, யாமிருக்க பயமே இயக்குநரை நாடியுள்ளது இந்த நிறுவனம்.
Post a Comment