பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சோனம் கபூர் உடல் நிலையில் முன்னேற்றம்

|

மும்பை: பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகை சோனம் கபூரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபல இந்தி நடிகை சோனம் கபூர், நடிகர் சல்மான்கானுடன் பிரேம் ரத்தன் தான் பயோ' என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரை அடுத்த கொண்டல் பகுதியில் நடந்தது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகை சோனம் கபூர் திடீரென பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். இதையறிந்த அவரது தாயார் சுனிதா கபூர் ராஜ்கோட் விரைந்து, சோனம் கபூரை தனி விமானம் மூலம் மும்பை அழைத்து வந்தார். பின்னர், சோனம் கபூர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சோனம் கபூர் உடல் நிலையில் முன்னேற்றம்

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது சோனம் கபூரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து படப்பிடிப்பு தளத்துக்கு திரும்புவார் என்றும் அவரது செய்தித்தொடர்பாளர் ஒருவர் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

மேலும், சோனம் கபூர் மீது ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையினர் கொண்டுள்ள அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

 

Post a Comment