கலிபோர்னியா: பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் ஃபோர்டு ஓட்டிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்டார் வார்ஸ், இந்தியானா ஜோன்ஸ், பிளேட் ரன்னர், விட்னஸ், பேட்ரியாட் கேம்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் ஹாரிசன் ஃபோர்டு.
72 வயதாகும் அவர் தொழில்முறை பைலட் ஆவார். விமானங்கள், ஹெலிகாப்டர்களை தானே ஓட்டிச் செல்லும் வழக்கம் உள்ளவர்.
கடந்த 1999-ம் ஆண்டு ஹாரிசன் ஃபோர்டு ஓட்டிச் சென்ற ஹெலிகாப்டர் சான்டா கிளாரிட்டா பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் லேசான காயங்களுடன் அவர் தப்பினார்.
நேற்று ஒரு சிறிய விமானத்தை ஃபோர்டு ஓட்டிச் சென்றார். அந்த விமானம் கலிஃபோர்னியாவின் வெனிஸ் நகர் அருகே வந்தபோது விபத்துக்குள்ளாகி, கோல்ப் மைதானத்தில் விழுந்தது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அபாய கட்டத்தை தாண்டி தற்போது உடல்நிலை தேறி வருகிறார்.
போர்டுக்கு 55 வருட பைலட் அனுபவம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment