இளையராஜா இசையில் உருவாகியுள்ள பிரமாண்ட சரித்திரப் படமான ருத்ரமாதேவி இசை வெளியீட்டு விழா ஆந்திராவில் இரு நகரங்களில் நடக்கவிருக்கிறது.
குணசேகர் தயாரித்து இயக்கியுள்ள ருத்ரமாதேவி, தமிழ் - தெலுங்கில் வெளியாகிறது. தமிழில் இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.
இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு தமிழ், தெலுங்கில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டை இரு நகரங்களில் நடத்துகின்றனர். நாளை மார்ச் 21-ம் தேதி மாலை விசாகப்பட்டினத்திலும், நாளை மறுநாள் 22-ம் தேதி வராங்கல் நகரிலும் இசை வெளியீடு நடக்கிறது.
நாளை தெலுங்கு ஆண்டு பிறப்பாகும். இதைக் கொண்டாடும் வகையில் 3 பாடல்களை விசாகப்பட்டினத்தில் வெளியிடுகிறார்கள்.
அடுத்த மூன்று பாடல்களை வராங்கலில் வெளியிடுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அரசியல், திரையுலகப் பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். இளையராஜாவும் பங்கேற்கவிருக்கிறார்.
Post a Comment