இரண்டாவது முறையாக விருது பெறுவதில் மகிழ்ச்சி! - நா.முத்துக்குமார்

|

சென்னை: தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக விருது பெறுவதில் மகிழ்ச்சி! - நா.முத்துக்குமார்

இதுகுறித்து அவர் கூறியதாவது:

"தங்க மீன்கள்' படத்துக்காக நான் எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்...' பாடல் முதல் முறையாக என்னை தேசிய விருது மேடைக்குக் கொண்டு சென்றது.

அதைத் தொடர்ந்து நிகழாண்டுக்கான தேசிய விருது பட்டியலிலும் எனது பெயர் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய விருது பெறுவது கூடுதல் மகிழ்ச்சி.

'சைவம்' படத்தில் இடம் பெற்ற 'அழகே அழகு...' பாடல் வாழ்வின் சில உன்னத விஷயங்களைச் சொல்லியிருக்கும். அந்தப் பாடலுக்கான சூழலை உருவாக்கித் தந்த இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது அடுத்தடுத்த பயணங்களுக்கான எரிபொருளாக இந்த விருது அமையும். தொடர்ந்து தரப்படும் இந்த மாதிரியான அங்கீகாரங்கள் எனது பொறுப்புகளை அதிகமாக்கியுள்ளன," என்றார் நா.முத்துக்குமார்.

தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை எழுதி வருபவர் நா முத்துக்குமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment