த்ரிஷா முதல் முதலில் நடிகையாக அறிமுகமானது பிரசாந்தின் ஜோடி படத்தில்தான். அதில் ஒரு சின்ன வேடத்தில் வந்தார். அதன் பிறகுதான் மவுனம் பேசியதே படம் நடித்தார்.
முதல் படம் பிரசாந்துடன் என்றாலும், அதில் அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை த்ரிஷா. சிம்ரன்தான் ஜோடி.
கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரசாந்த் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. இந்த முறை அவருடன் முதல் முறையாக ஜோடி சேருகிறார்.
பாலிவுட்டில் பெரும் பாராட்டுகளைக் குவித்த ஸ்பெஷல் 26 என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் இருவரும் இணைகிறார்கள்.
அக்ஷய்குமார்-காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான படம் ஸ்பெஷல் 26. இப்படம் பாலிவுட்டில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தின் தென்னக உரிமையை இயக்குனரும், நடிகருமான தியாகராஜன் பெற்றுள்ளார். இதையடுத்து, இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இப்படத்தின் தமிழ் பதிப்பில் நடிகர் பிரசாந்தும், தெலுங்கு பதிப்பில் ரவிதேஜாவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 'ஸ்பெஷல் 26' இந்தி படத்தில் காஜல் அகர்வால் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பத்து வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா, இதுவரை பிரசாந்துக்கு ஜோடியாக நடித்ததில்லை. இந்தப் படம் மூலம் முதல் முறையாக இருவரும் ஜோடி சேர்கின்றனர்.
த்ரிஷாவின் திருமணத்துக்கு முன்பே இந்தப் படத்தை முடித்துவிட தியாகராஜன் திட்டமிட்டுள்ளாராம்.
Post a Comment