சென்னை: திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் நடிக்காமல் "லீவு" விட்டிருந்த ஜோதிகாவிற்கு மீண்டும் நடிக்க பச்சைக் கொடி காட்டியதுடன், மற்றொரு ஆசையையும் நிறைவேற்றி வைத்துள்ளார் அவரது அன்புக் கணவர் சூர்யா.
தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் ஜோடி என்றால் சூர்யா-ஜோதிகா தான். இதில் ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து இந்திய அளவில் ட்ரண்ட் ஆனது.
இந்நிலையில் தமிழ்நாட்டு மருமகள் ஆன ஜோதிகாவிற்கு ஹோலி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று ஆசை வந்துள்ளது.
இதை சூர்யாவிடம் கூற, தன் நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து தன் வீட்டிலேயே ஹோலி கொண்டாடி உள்ளனர்.
Post a Comment