”சக்தி” போய் இப்போ “ஆதிரா”... ஆரம்பமாகும் அமானுஷ்யங்கள் நிறைந்த புதிய தொடர்!

|

சென்னை: சன் டிவியில் இதுவரையில் இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பாகி வந்த "சக்தி" நெடுந்தொடர் முடிவடைந்துள்ளது.

இந்தநிலையில் வருகின்ற திங்கட்கிழமை முதல் புதிதாக அந்த ஸ்லாட்டினைப் பிடித்துள்ளது "ஆதிரா" என்ற அமானுஷ்ய டிரெய்லரோடு அசத்தும் புதிய தொடர்.

”சக்தி” போய் இப்போ “ஆதிரா”... ஆரம்பமாகும் அமானுஷ்யங்கள் நிறைந்த புதிய தொடர்!

அஞ்சு வருகிறார்

இந்தத் தொடரின் மூலமாக நடிகர் விஜய்யுடன் ஒன்ஸ் மோர், பூவே உனக்காக, நடிகர் ரஜினியுடன் அருணாச்சலம் ஆகிய படங்களில் நடித்த அஞ்சு தமிழ் சீரியல்களுக்குள் பிரவேசிக்கின்றார்.

பிரேக் விட்ட பாலா

கொஞ்ச நாட்களாக சீரியல்களில் தலை காட்டாமல் பிரேக் விட்டிருந்த நடிகர் பாலாசிங்கம் இந்த சீரியல் மூலமாக டிவி உலகில் மீண்டும் நுழைந்துள்ளார்.

திருமாங்கல்யம் ஸ்ரீவாணி

தமிழில் "திருமாங்கல்யம்" தொடரின் மூலம் கதாநாயகியான "ஸ்ரீவாணி" என்ற தெலுங்கு நடிகைதான் இந்தத் தொடரின் நாயகி "ஆதிரா". கிட்டதட்ட புரோமோவே டெரராகத்தான் இருக்கின்றது.

பேயா.. ஆவியா..

பேய்கள், ஆவிகள் குறித்த தொடரா, இல்லை அமானுஷ்யங்கள் நிறைந்த தொடரா, பழிவாங்கும் படலம் கொண்டதா என்றெல்லாம் யூகிக்க முடியாவிட்டாலும், திகிலான தொடர் என்பது மட்டும் புரிகின்றது. "ஆதிரா" என்று அமானுஷ்யமாக பாடும் ஆண்குரலும், அதே நேரத்தில் வெண்மையாக மாறும் வாணியின் கண்களும் அப்படித்தான் கூறுகின்றன.

ஏற்கனவே, மர்ம தேசம், ருத்ர வீணை, சிவமயம், சிவசங்கரி, பைரவி போன்ற அமானுஷ்ய தொடர்களுக்கு பெயர் போன சன் டிவி அவற்றையெல்லாம் வார இறுதி நாட்களில் மட்டுமே ஒளிபரப்பி வந்துள்ள நிலையில், தினசரி

நெடுந்தொடர்களின் வரிசையில் முதல் அமானுஷ்ய சீரியலாக கால்பதித்துள்ளது "ஆதிரா".

டெய்லி பயப்படலாம்

சனி, ஞாயிறுகளில் மட்டுமே அமானுஷ்ய தொடர்களைப் பார்த்து வந்த திரில்லர் பிரியர்களுக்கு இது ஒரு வகையில் இனிப்பான செய்தி.

பட் டேஸ்ட் குறையக் கூடாது மிஸ் பேய்!

எனினும், தினமும் ஒளிப்பரப்பாகவிருக்கும் இத்தொடரில் அமானுஷ்யத்தின் சுவையைக் கொஞ்சமும் குறையாமல் கொடுக்கின்றதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

 

Post a Comment