சென்னை: தனது படங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து வரி விலக்கு அளிக்க மறுப்பால், வரி விலக்கு குழு மீது வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளார்
உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா, சந்தானம் நடித்துள்ள படம் ‘நண்பேன்டா'. ஏ.ஜெகதீஷ் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வெளியாகிறது.
அனைத்துத் தரப்பினரும் பார்க்கத் தக்க படம் என சென்சார் சான்று அளிக்கப்பட்ட பிறகும் தமிழக அரசின் வரிவிலக்குச் சலுகை கிடைக்கவில்லை.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்துக் கூறுகையில், "நண்பேன்டா' படம் காமெடி படமாக தயாராகி உள்ளது. நயன்தாரா மீண்டும் எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். சந்தானம் ஜோடியாக ஷெரின் நடித்துள்ளார்.
இந்த படத்தை தமிழக அரசின் வரி விலக்கு குழுவினருக்கு காட்டினோம். படத்தைப் பார்த்து விட்டு வரிவிலக்கு அளிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக எனக்கு தகவல் வந்துள்ளது.
ஏற்கனவே என் படங்களுக்கு வரி விலக்கு அளிக்க மறுத்த குழுவினரே இந்தப் படத்தையும் பார்த்துள்ளனர்.
இவர்கள் மீது ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளேன். தற்போது ‘நண்பேன்டா' படத்துக்கும் வரி விலக்கு அளிக்காததை எதிர்த்து 6 பேர் மீதும் வருகிற 30-ந்தேதி புதிய வழக்கு தொடருவேன்," என்றார்.
Post a Comment