உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் 'அராத்து'

|

விஜய்யை வைத்து ‘ப்ரியமுடன்', ‘யூத்' போன்ற படங்களையும், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன் படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா தனது பெயரை ப்ரியமுடன் ஷெல்வா என மாற்றிக் கொண்டு, அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார்.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் 'அராத்து'

இந்தப் படத்துக்கு அவர் சூட்டியிருக்கும் பெயர் அராத்து.

அதென்ன அராத்து...? இயக்குநர் ஷெல்வா பேசுகையில், "உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வடசென்னையை களமாகக் கொண்டது இப்படம். கதையின் யதார்த்தம் குறையாமல் எடுக்கத் திட்டமிட்டுளோம்.

அழகிய காதலையும், முரட்டு தனத்தையும் முறையே சரிசமமாக கொண்டதுதான் ‘அராத்து'.

படத்திற்கு புத்துணர்வு தரும் வகையில் விஜய் கார்த்திக், சம்பி ஆகிய புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளோம். ‘டங்கா மாரி' புகழ் விஜி இரண்டு பாடல்களை எழுதி பாடுகிறார். ‘அராத்து' கதைக்கான வடசென்னையை நாங்களே வடிவமைத்து செட் போட்டுள்ளோம். இது கதைக்கு மேலும் வலு சேர்க்கும்," என்றார்.

 

Post a Comment