ஜூனியர் கேப்டனுக்கு கதை ரெடி பண்ணும் 2 இயக்குனர்கள்

|

சென்னை: தனது மகன் ஹீரோவாக அறிமுகமான படம் தோல்வி அடைந்த கவலையில் உள்ளாராம் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த தலைவர்.

சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த அவர் திடீர் என்று ஒரு நாள் அரசியல் கட்சியை துவங்கினார். நல்ல நடிகர், நல்ல மனிதர் நிச்சயம் நமக்கு அவர் நல்லது செய்வார் என மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தனர். இந்நிலையில் நடிகர் தனது இரண்டாவது மகனை தனது வழியில் ஹீரோவாக்கினார்.

2 directors write story for junior captain

தானே தயாரித்து ஒரு படத்தை எடுத்து வெளியிட்டார். படத்தை அவரது கட்சியினர் தான் ஆஹா, ஓஹா என்று கொண்டாடினார்களே தவிர ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எத்தனை பேரிடம் கதை கேட்டு இதை தேர்வு செய்தும் வீணாகிவிட்டதே என்று அவர் கவலையில் உள்ளாராம்.

மேலும் உட்கார்ந்து, உட்கார்ந்து கதை கேட்டீங்களே இது தான் நீங்க கதை கேட்ட அழகா என்று மனைவி மீதும், மைத்துனர் மீதும் அவருக்கு கோபமாம். இந்நிலையில் அவர் தனது மகனை வேறு இயக்குனர்களின் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்கிறாராம்.

இதற்காக அவர் கபடி கபடி இயக்குனர் மற்றும் தேசிய விருது வாங்கிய படத்தை இயக்கிய வெற்றி இயக்குனர் ஆகியோரிடம் கதை தயார் செய்யுமாறு கூறியுள்ளார். மகனே, நீ கவலைப்படாதே உன்னை நான் நல்ல படத்தில் நடிக்க வைப்பேன் என்று ஆறுதல் கூறி வருகிறாராம்.

 

Post a Comment