ரஜினியின் அடுத்த படம் லைக்காவுக்காமே!

|

ரஜினியின் அடுத்த படம் எந்திரன் 2.. ஷங்கர் இயக்குகிறார்.. லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது..

-இன்று பிற்பகலிலிருந்து இணையதளங்கள், சமூக வலைத் தளங்களில் கலக்கும் செய்தி இதுதான்.

ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘எந்திரன்'. சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளிவந்த இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். இப்படம் வசூலில் பெரிய சாதனையை படைத்தது. இதுவரை தமிழில் வெளிவந்த எந்த படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.

ரஜினியின் அடுத்த படம் லைக்காவுக்காமே!

இந்த கூட்டணி மீண்டும் இணையப் போவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், எந்திரன் 2-ம் பாகத்தில் ரஜினி நடிக்கப்போவது உறுதி செய்யப்பட்டு விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் ரஜினி இரட்டை வேடத்திலேயே நடிக்கவிருக்கிறாராம். ஷஇயக்கவிருக்கிறாராம். இப்படத்தை ‘கத்தி' படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, லைக்கா நிறுவனம் தயாரித்தது என்ற ஒரே காரணத்தால் கத்தி படம் பெரிய அளவில் பிரச்சினைகளைச் சந்தித்தது. பின்னர் நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் தாராளமாய் தமிழில் படம் தயாரிக்கலாம், எதிர்ப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவு பெற்றது.

இப்போது ரஜினி படத்தையும் லைக்கா தயாரிக்கிறது என்ற தகவலே சினிமா மற்றும் ரசிகர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Post a Comment