அழகான குடும்ப உறவுகளைச் சொல்லும் படம் “கொம்பன்” – டுவிட்டரில் சூர்யா "வாய்ஸ்"!

|

சென்னை: கொம்பன் குடும்ப உறவுகள் குறித்த ஒரு அழகான படம் என்று கார்த்தியின் "கொம்பன்" திரைப்படத்திற்கு ஆதரவாக அவரது அண்ணனும், நடிகருமான சூர்யா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண், கோவை சரளா, தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ள படம் கொம்பன்.

இப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். படம் வருகிற 2 ஆம் தேதி வெளியாவதாக தான் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கொம்பன் படத்துக்கு சாதிய அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பவே படத்தை ஒருநாள் முன்கூட்டியே இன்று திரைக்கு கொண்டு வந்துவிட்டனர்.

இந்நிலையில் படத்தின் நாயகன் கார்த்தியின் அண்ணன் சூர்யா கொம்பனுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கொம்பன்" படம் அழகான உறவுகளைப் பற்றிய படம்.

படத்தின் வெளியீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஏன் இப்படி திடீரென உணர்வுபூர்வமான நிலை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு டுவிட்டில் இந்த பிரச்னைக்கு ஆதரவளித்துள்ள திரையுலகப் பிரபலங்கள், மீடியாக்கள், ரசிகர்கள் ஆகியோரின் மனமார்ந்த ஆதரவுக்கு நன்றி. சென்சார் போர்டு முடிவை ஏற்றுக் கொண்டு, அதற்கு மரியாதை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Post a Comment