‘ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே’... தான் படித்த பள்ளியிலேயே ஷூட்டிங் நடத்திய தனுஷ்!

|

சென்னை: தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தான் படித்த பள்ளியிலேயே நடத்தியுள்ளார் நடிகர் தனுஷ்.

வேலையில்லா பட்டதாரி பட வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் மீண்டும் வேல்ராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படத்தில் தனுஷின் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல்பாதி படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டது. இரண்டாம் பாதி படப்பிடிப்பு தனுஷ் படித்த பள்ளியில் நடைபெற்றது.

தான் படித்த பள்ளியிலேயே படப்பிடிப்பு நடைபெறுவது குறித்த தனது மகிழ்ச்சியை, தனது டுவிட்ட ர் பக்கத்தில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தனது பள்ளி நண்பரும், இப்புதிய படக்குழுவைச் சேர்ந்தவருமான நண்பருடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், ‘இந்தப் பள்ளியில் தான் நான் எல்.கே.ஜி. முதல் 10ம் வகுப்பு வரைப் படித்தேன்' என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இப்புதிய படத்தினை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இது குறித்து தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் செல்ஃபி வீடியோ போஸ்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment