பிரபல பாடகராக பல பாடல்கள் பாடியுள்ள ஸ்ரீநிவாஸ் முதலில் இசையமைத்துள்ள படம்தான் 'கங்காரு'.
அவர் தன் முதல் பட அனுபவங்களை இங்கே கூறுகிறார்...
"நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று 2000 பாடல்கள் பாடியிருக்கிறேன். எனக்கு இசைமீது தனியாத தாகம் உண்டு. ஆர்வமுண்டு. நம்பிக்கை உண்டு. ஆனால் இசையமைப்பதைத் தேடிப் பயணப் படவில்லை. காரணம் பாடகராகவே நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. அப்படியும் வஸந்த் சார் இயக்கத்தில் 'ஏய்நீ ரொம்ப அழகா இருக்கே' படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்தேன்.
'இனி நானும் நானில்லை' என்கிற அந்தப் படலும் ஹிட்தான். மீண்டும் இசை அமைக்க நேரமில்லை. இந்நிலையில் நண்பர் மூலம் சாமி வந்தார். கதை கேட்டேன். ரொம்பவும் நேர்மையாக இருந்தது. பாடல் உருவானது பாடல் பிடித்து தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி சம்மதித்தது அவரது ரசனையின் மதிப்பைக் காட்டியது.
வைரமுத்து சாரின் வரிகளைப் பாடியிருக்கிறேன். அவர் வரிகளுக்கு இசையமைப்பேனா என்று கனவு கூட கண்டதில்லை. அப்படி நடந்தது என்பாக்கியம். அவர் பாடல்கள் படத்துக்குப் பெரியபலம். படத்தில் 5பாடல்கள் . அவர் எழுதிய வரிகளுக்கு இசையமைத்து 2பாடல்களும் மெட்டுக்கு எழுதி 3பாடல்களும் என்று இசையமைப்பில் இருவேறு அனுபவங்களும் கிடைத்தன. பாடல்கள் பெரிய வெற்றி. ஐ ட்யூன்களில் நம்பர் ஒன்.
காதல், பாசம், தத்துவம் என எல்லாவகை பாடல்களும் உள்ளன. பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து படமும் வெற்றி பெற்றிருப்பதால் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்..,'' என்கிறார் ஸ்ரீநிவாஸ்.
Post a Comment