ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சமந்தா... தடியடி நடத்தி மீட்ட போலீஸ்... ஹைதராபாத்தில் பரபரப்பு!

|

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவிற்குச் சென்ற நடிகை சமந்தா, எதிர்பாராதவிதமாக ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். பின்னர், ரசிகர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார் நடிகை சமந்தா.இவர் தமிழில் தற்போது விக்ரம் ஜோடியாக 10 எண்றதுக்குள்ள, சூர்யா ஜோடியாக 24 மற்றும் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சமந்தா... தடியடி நடத்தி மீட்ட போலீஸ்... ஹைதராபாத்தில் பரபரப்பு!

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்றிருந்தார் சமந்தா. நகைக்கடை திறப்பு விழாவில் சமந்தா கலந்து கொள்ளும் தகவல் அறிந்து முன்கூட்டியே ரசிகர்கள் நகைக்கடையைச் சுற்றி திரண்டிருந்தனர். எனவே, பாதுகாப்புக்காக போலீசார் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.

ஆனால், காரில் இருந்து இறங்கிய சமந்தாவைப் பார்க்க முண்டியடித்த ரசிகர்கள் தடுப்பை மீறி வந்து, சமந்தாவிடம் கைகுலுக்க முயற்சித்தனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் சிக்கினார் சமந்தா.

இதையடுத்து ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி சமந்தாவை மீட்டு அழைத்து சென்றனர்.

கூட்டத்திலிருந்து வெளியே வந்த சமந்தா, ரசிகர்களைப் பார்த்து புன்னகைத்தபடியே கை அசைத்தார். பின்னர் நகைக்கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த சமந்தா, அங்கிருந்த விதவிதமான நகைகளை எடுத்து தனது கழுத்தில் அணிந்து அழகு பார்த்தார்.

 

Post a Comment