தம்பி நடிகர் படத்தில் ஆட்டம் போட மறுத்த தளபதி நடிகர்

|

சென்னை: தனது தம்பி நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட தளபதி நடிகர் மறுத்துவிட்டாராம்.

தளபதி நடிகரை போன்று அவரது சித்தி மகனும் ஹீரோவானார். ஆனால் கிரிக்கெட்டில் ஜொலிக்கும் அவரால் திரை உலகில் ஜொலிக்க முடியவில்லை. இருப்பினும் வரும் வாய்ப்புகளில் நல்லதாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தம்பி நடிகருக்காக ஆட மறுத்த தளபதி நடிகர்

இந்நிலையில் தளபதியின் தம்பி நடிகர் புதிதாக ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்தை தயாரிப்பவர்கள் அதை விளம்பரப்படுத்த ஒரு பாட்டுக்கு ஆடுமாறு தளபதி நடிகரை அணுகி கேட்டார்களாம். தம்பி படமாச்சே ஆடுவார் என்று நினைத்து கேட்டவர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சமாம்.

காரணம் தம்பியாக இருந்தும் அவர் படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட தளபதி நடிகர் மறுத்துவிட்டாராம். இதனால் தம்பி நடிகர் மனம் நொந்து போயுள்ளார். இதை பார்த்த அவரின் நண்பர்களான 4 ஹீரோக்கள் நண்பேன்டா நாங்கள் இருக்கிறோம், கலங்காதே என்று கூறி ஒரு பாடலுக்கு ஆடினார்களாம்.

என்ன சொந்தமாக இருந்தாலும் என் நண்பர்கள் போல வருமா என்று தம்பி நடிகர் நெகிழ்கிறாராம்.

 

Post a Comment