சமந்தாவுக்கு தமிழில் பெரிய ஹிட் ராசி இல்லை என்றாலும், தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் வந்தபடிதான் உள்ளன.
நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான் என சமந்தா நடித்த பெரிய படங்கள் சரியாகப் போகாத நிலையில், கத்தி ஓரளவு அவருக்குக் கைகொடுத்தது.
அதைத் தொடர்ந்து விக்ரம் ஜோடியாக பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து சூர்யா, தனுஷ் ஆகியோரது படங்களிலும் இவர்தான் நாயகி.
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் பத்து எண்றதுக்குள்ள படத்தில்தான், தான் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளதாக சமந்தா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "விஜய் மில்டன் இயக்கிய 'கோலி சோடா' படம் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.
நெடுஞ்சாலையில் நடைபெறும் விறுவிறுப்பான சம்பவங்களை திரைக்கதையாக கொண்ட படம், 'பத்து எண்றதுக்குள்ள.' இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த கதாபாத்திரம், இதுதான்," என்கிறார்.
Post a Comment