மும்பை: நடிகர் சல்மான் கான் தனது காதலி என்று கிசுகிசுக்கப்படும் நடிகை எல்லி அவ்ரமை பாதுகாக்க பாதுகாவலர்களை பணியமர்த்தியுள்ளாராம்.
49 வயதாகும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே உள்ளார். திருமணம் எப்போது பாய் என்று கேட்டால் சிரித்துவிட்டு குழந்தை பெற்றுக் கொள்ள மட்டும் ஆசையாக உள்ளது என்று கூறி கேட்டவர்களை ஆஃப் செய்துவிடுகிறார்.
சல்மான் கானின் காதலி என்று ஒரு பெரிய்ய்ய்ய பட்டியலே போடலாம். அத்தனை பேர் இருந்தனர். இந்நிலையில் மிக்கி வைரஸ் வைரஸ் படம் மூலம் பாலிவுட் வந்த வெளிநாட்டு நடிகை எல்லி அவ்ரம் சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் - 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர்களுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சல்மான் கானின் தற்போதைய காதலி எல்லி என்று பாலிவுட்டே கிசுகிசுத்தது கிசுகிசுக்கிறது.
பிக் பஸ் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து எல்லியை தனது பாதுகாப்பில் வைத்துள்ளாராம் சல்மான். மகாராஷ்டிரா மாநிலம் பான்வெலில் உள்ள தனது பண்ணை வீட்டில் எல்லியை தங்க வைத்துள்ளாராம் சல்மான். அவர் அடிக்கடி அங்கு சென்று அந்த நடிகையை பார்த்து வருகிறாராம்.
இந்நிலையில் சல்மான் எல்லியை பாதுகாக்க பாதுகாவலர்களை பணியமர்த்தியுள்ளார். எல்லி மும்பைக்கு வர விரும்பியதால் பந்த்ரா பகுதியில் வீடு பார்த்தும் கொடுத்துள்ளார். மும்பையில் அவரை பாதுகாக்க தான் அந்த பாதுகாவலர்கள் குழுவாம்.
Post a Comment