ருத்ரமாதேவி படத்தின் இசைச் சேர்ப்புப் பணிக்காக லண்டன் சென்றுள்ள இளையராஜா அங்குள்ள சிம்பொனி இசைக் குழுவை வைத்து படத்துக்கு இசையமைத்தார்.
குணசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ரமாதேவி படம் அடுத்த மாதம் தமிழ் - தெலுங்கில் வெளியாகிறது. தமிழில் இந்தப் படத்தை ராம நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இப்போது படத்துக்கு பின்னணி இசைக் கோர்க்கும் பணியில் உள்ளார் இளையராஜா. இதற்காக கடந்த வாரம் லண்டன் புறப்பட்டுச் சென்ற இளையராஜா, அங்குள்ள ஏஞ்சல் ஸ்டுடியோவில் அதற்கான பணிகளைச் செய்து வருகிறார்.
புகழ்பெற்ற சிம்பொனி இசைக் குழுவை வைத்து இந்தப் படத்துக்காக இசைக் கோர்வைகளை உருவாக்கி வருகிறார்.
டைட்டானிக், ஸ்பைடர்மேன், பேட்மேன் உள்ளிட்ட படங்களுக்கு இந்த ஸ்டுடியோவில் வைத்துதான் இசைச் சேர்ப்புப் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment