தனியார் டிவி நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக புகார்: நளினி, ராதிகாவுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

|

சென்னை: தனியார் டிவி நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நடிகைகள் ராதிகா, நளினி, இயக்குநர் விக்கிரமன் ஆகியோர் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்மேகம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:

தனியார் டிவி நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக புகார்: நளினி, ராதிகாவுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

மொழி மாற்று சின்னத்திரை தொடர்களுக்கு எதிராக சென்னையில் கடந்த 15-ஆம் தேதி சின்னத்திரை நடிகர், நடிகைகள் போராட் டம் நடத்தினர். அப்போது பேசிய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராதிகா, சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவர் நளினி, தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் ஆகியோர் மீது தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்துப் பேசினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் பிரபா வாதிடும்போது, இந்த மனு தொடர்பாக தமிழக காவல் துறை இயக்குநரிடம் விவரம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து நடிகைகள் ராதிகா, நளினி, இயக்குநர் விக்கிரமன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

 

Post a Comment