உரலுக்குள் தலையைவிட்டால் பழமொழி சிம்பு விஷயத்தில் நூறு சதவீதம் உண்மையாகிவிடுகிறது.
அவர் படத்தைத் தயாரிக்கும் அல்லது இயக்கும் அல்லது உடன் நடிக்கும் யாரும் பிரச்சினையில் சிக்கிக் கொள்கின்றனர்.
உதாரணங்கள் எக்கச்சக்கம். இப்போதைக்கு இயக்குநர் பாண்டிராஜ்.
சிம்புவை இயக்கப் போகிறார் பாண்டி என்று செய்தி வெளியானது, 'மாட்னார்டா இந்தாளு' என்றுதான் கமெண்ட்கள் பறந்தன.
ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேரும் படம் என்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.
விறுவிறுவென படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே, கவுதம் மேனன் பாதியில் விட்டுச் சென்ற ‘அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார். அது தவிர, ‘வாலு' படத்தை வெளியிடுவதற்கான பணிகளிலும் மும்முரம் காட்டினார், இது நம்ம ஆளு அப்படியே நின்றுவிட்டது.
இன்னொரு பக்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சிம்புவின் தம்பி குறளரசனோ, இசைப் பணியில் ஏகப்பட்ட தாமதம் செய்து வருகிறாராம். இன்னும் ட்ரைலருக்குக் கூட இசையமைத்துத் தரவில்லையாம். இதை வெளிப்படையாகவே புலம்பித் தீர்த்தார் பாண்டிராஜ்.
இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், "எல்லா படமுமே நல்ல படமா வரவேண்டும் என்றுதான் உழைக்கிறோம். ஆனால், சிலது நல்ல படமா அமையுது, சிலது நல்ல பாடமா அமையுது. சிலது ஏடாகூடமா அமையுது. எதுவுமே அமையனும்..," என 'ஜென்' நிலைக்குப் போய்விட்டார். என்று டுவிட் செய்துள்ளார்.
இந்த புலம்பல் சிம்புவுக்குத் தெரியாததல்ல.. ஆனால் அவரும் வம்படியாக அமைதி காக்கிறார்.
Post a Comment